May 08, 2009

விஜய்யின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்த....ஏறிய ஏணியை எட்டி உதைப்பது தமிழ் நாட்டுக்கு ஒன்னும் புதுசு கெடயாது. தமிழக
சினிமா ரசிகர்களுக்கு சில நேரங்களில் சொரணையற்றுப் போய்விடும்.அப்போது நாய்
கடித்தாலும் நாலு நாளைக்குத் தெரியாது. அந்த வகையில் தமிழக சினிமா ரசிகர்கள்
குறிப்பாக ஏழை ரசிக கண்மணிகள் தங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தவற்றை கொட்டி
கொட்டி போஸ்டர் அடித்து பேனர் கட்டி இன்று மிகபிரம்மாண்டமாய் வளர்ந்து நிற்பவர்
நடிகர் விஜய்.சென்னை மாநகராட்சியில் கூவந‌திக்கரையோரம் குந்திகினு இருப்பவர்க
களும், வானமே கூரையாய் பிளாட்பாம்களில் படுத்துக் கிடப்பவர்களும் எம்ஜிஆரை
அடுத்து விஜயையே கொண்டாடுகின்றனர் என்பது அந்த ஏரியா வாழ் மக்களுக்கு நன்கு
தெரியும். இதனால் தான் என்னவோ பணமுதலைகளும், கையில்லாத டீசர்ட்,கழுத்தில்லாத
டீசர்ட், சில நேரங்களில் துணியே இல்லாத‌ டீசர்ட் அணிந்த‌ நவரச மங்கைகளும்,
IT பெருமக்களும் பெருமளவு கூடி க் கும்மியடிக்கும் சத்யம் திரையரங்கில் விஜய்
படத்தை ரிலீஸ் செய்ய மாட்டார்களாம். இது நான் சொல்லவில்லை. அந்தரங்கத்தில்
(அந்த+அரங்கத்தில்) வேலை செய்யும் என் நண்பர் ஒருவர் சொன்னது.

இப்ப என்னா மேட்டருனா ஒரு காலத்திலே தன் அருமை தந்தை தமிழக பிட்டு பட உலகின்
குரு திரு.சந்திரசேகர் எடுத்துவந்த(பிட்டு) படங்களில் நடித்து ரசிகர்களினால்
கவரப்பட்டு (ஏன் கவறாது? சகீலா படங்களின் வருகைகைக்கு முன் இவர் படம் தான்
ரேட்டிங்கில் இருந்தது) முன்னனி ஹீரோவாய் உயர்ந்த விஜயின் சமீபத்திய‌ மிக
பிரம்மாண்டமான வெற்றிப் படமான வில்லுவின் ரேட்டிங் குறித்து அறிவதற்காக அதன்
இயக்குனர் பிரபுதேவாவை கையிலே பிடித்தபடி ஊர் ஊராய் சுற்றி வந்த விஜய்க்கு
வில்லங்க பகவான் திருச்சியிலே தரிசணம் கொடுத்துவிட்டார்.


உங்களுக்குத் தான் எம்ஜிஆர்,ரஜினி ஸ்டைல் ஒத்துவரலியே அப்றம் ஏன் இந்த அள‌விற்கு
ரிஸ்க் எடுக்கிறீங்க என ஒருஉள்ளூர் தொலைக்காட்சி நிறுபர் NDTV,BBC லெவலுக்கு
கேள்வி கேட்க, ஏற்கனவே வில்லுவின் விவகாரத்தில் கடுப்பிலிருந்த விஜய் சம்மந்தமே
இல்லாமல் அங்கிருந்த ரசிகர்களை நோக்கி "டேய்...,பேசிக்கிட்டு
இருக்கோம்ல...,,சைலண்ஸ்"
என தன் கோபத்தை கொட்டிவிட்டார். அவர் கத்துவதை அருகில் இருக்கும் பிரபுதேவா
உள்ளுக்குள் பயத்தோடு, "ஆஹா இவன் இருக்கும் கடுப்புல கொஞ்சம் வுட்டா நம்மள
கடிச்சே கொன்னுடுவான்" என நினைத்தவாறே திரும்பிப் பார்க்கிறார். நம்ம கேள்வி
என்னன்னா ஒன்னு உன் கோபத்த பிரபுதேவா மேல காட்டியிருக்கனும், இல்ல அந்த நிறுபர்
மேல காட்டியிருக்கனும் அத விட்டுட்டு ரசிகர்கள் மேல உன‌க்கு ஏன் இந்த
வெறி? அதற்குப்
பிறகு அவர்களிடம் ஒரு மன்னிப்பு கூட கேட்காமல் சென்றது என்ன ஆணவம்.முட்டாள்
ரசிகர்கள் அவன் டேய்னு சொன்ன அடுத்த நிமிடம் 10 சேரை பறக்க விட்டிருந்தா, இன்னேரம்
மன்றத்திலிருந்து 10 பேர் விலகியிருந்தா விஜய்க்கு இது ஒரு பாடமாக
இருந்திருக்கும். "என்னை வாழ வைக்கும் ரசிக தெய்வங்க‌ளேன்னு" இனி எவன்
சொன்னாலும் நம்ப‌க்கூடாது என்பதற்கு இது ஒரு உதாரணம். இவர்களெல்லாம் சினிமாவில்
மட்டுமின்றி நிஜத்திலுமே நடிப்பவர்கள் தான்.இப்ப மீண்டும் மேலே உள்ள‌ நீல
வரிகளைப் படிங்க.

ஆடாதடா ஆடாதடா மனிதா ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவே மனிதா.தற்சமயம் துவண்டு கிடக்கும் விஜய்யின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்த சில
யோசனைகள்.

யோசனை1: திருச்சி பிரஸ்மீட்டிங்கில் நான் கலந்துகொள்ளவே இல்லை. என்னைப் போலவே
தோற்றம் கொண்ட ஒரு நபரை வைத்து குறிப்பிட்ட சிலர் செய்த சதி இது.அதேபோல் வில்லு
என்ற திரைப்படத்தில் நான் நடிக்கவே இல்லை,அதுவும் போலிதான் என அறிக்கை
ஒன்றைவிட்டால் ரசிகர்கள் உங்களை நம்பி விடுவார்கள்.

யோசனை2: இனிமேல் ரிலீஸாகும் உங்கள் படங்களுக்கு கதை என்று ஒன்று இருந்தால் அதை
ஒரு பிட் நோட்டீஸில் பிரிண்டு செய்து தியேட்டர் வாசலில் படம்பார்க்க
வருபவர்களுக்கு விணியோகிக்கலாம்.

யோசனை3: இனிமேல் ரீலீசாகும் உங்களின் படங்கள் ஓடும் திரையரங்களில் படம்
முடிந்தவுடன், இந்த படத்தின் கதையைச் கண்டுபிடிப்பவருக்கு ஒரு “காண்டாசா கார்”
பரிசு என போட்டி வைக்கலாம். கவலையே வேண்டாம் அதை மட்டும் யாராலும்
கண்டுபிடிக்க இயலாது

யோசனை4: டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் கொடுக்கும் போது கூடவே ஒரு சாரிடான்
மாத்திரை,ஒரு பிரஸர் மாத்திரை மற்றும் ஒரு வாட்டர் பாக்கெட் சேர்த்து ஒரு
பையில் போட்டு, 3டி படங்களுக்கு டிக்கெட்டுடன் கண்ணாடி கொடுப்பது போல
கொடுக்கலாம்.

யோசனை5: திரையரங்கில் ஒவ்வொரு வகுப்புகளுக்கும் தனித்தனியே கைடுகளை(Guide)
நியமித்து ஒவ்வொரு சீன் முடிந்த பின்னும் அதில் என்ன வந்தது என்பதை படம்
பார்ப்பவர்களுக்கு விளக்கிச் சொல்லலாம்.

யோசனை6: திரையரங்க வாயிலில் ஆம்புலண்சுடன் கூடிய மருத்துவக்குழுவை தயார்
நிலையில் வைத்து படம் பார்த்துவிட்டு வெளியே வரும் முதியவர்கள்,
இதயபலகீணமுள்ளவர்கள் ஆகியவர்களுக்கு உடணடியாக முதலுதவி சிகிச்சையளிக்கலாம்.
இப்படி செய்தால் அவ்ர்கள் இனி உங்கள் படத்திற்கு நம்பி வருவார்கள்.

யோசனை7: உங்கள் படங்களில் தற்போது காமெடி மிகக்குறைந்து, நீங்கள் சீரியஸாக
பேசும் வசணங்கள் மற்றும் பஞ்ச் டைலாக்குகளுக்கு மக்கள் சிரிக்க ஆரம்பித்து
விடுகின்றனர்.அதனால் நல்ல காமெடி சீன் வைப்பது சிறந்தது.

யோசனை8: குறிப்பாக‌ நீங்கள் டாக்டர் பட்டம் வாங்கியதை காமெடி சீனாக படத்திலே
வைத்தால் அதைப் பார்ப்பவர்கள் விழுந்து,விழுந்து சிரிப்பார்கள். அதுமட்டுமின்றி
சிறந்த காமெடிக்கான பிலிம்பேர் அவார்ட்டையும் அந்த படம் பெரும்.

No comments:

Post a Comment

Write you comments here :)

இதையும் பார்க்கலாமே...

Related Posts with Thumbnails