December 01, 2010

பழிமொழிசட்டியில்  இருந்தால் 
அகப்பையில் வரும் என 
பழி ஒன்று வந்திடுமே 

அகப்பையின் ஓட்டை 
அறியா சட்டி அள்ளித் 
தந்தும் நொந்திடுமே 


November 02, 2010

உயிரின் வலி
கடிபட்ட இடம்
கணிக்க முடியவில்லை
எரியும் இடம்
அணைக்க முடியவில்லை  

யாரோ இழுப்பது போல்
உடல் போகிறது
அடுப்பில் வைத்தது போல்
குடல் வேகிறது

ரத்த ஓட்டம்
மாய் உணர்ந்தேன்
உயிர் இருந்தும்
பிணமாய் கிடந்தேன்

எல்லா திசைகளிலும்
நரம்புகள் இழுக்க
விசைகள் அற்று
கை கால் கிடக்க

ரத்தத்தில் கலக்கும்
கல்லீரல் பித்தம்
மூளையை முடக்கும்
மரண யுத்தம்

ஈரம் இழந்து 
நாக்கு சரிந்தது
மருந்து இன்றி
உயிர் பிரிந்தது

எரிந்து  முடிந்த
சாம்பலை போல
சலனமற்று கிடக்குது
உடல் சுகமாய்...  


ஐயோ கடித்தது
பசி யென்னும் பூச்சி
பொய்யோ மெய்யோ
இது உயிரின் நீட்சி


October 25, 2010

விழி - பழி
வியக்க வைக்கும்
உன் விந்தை விழி, ஒரு விடியல்,

காண்போருக்கு
அது செய்யும் பழி, ஒரு நொடியில்.       September 16, 2010

சும்மா தெரிஞ்சிகோங்க..
BUS - Break Under Stopping

CHESS- Chariot Hourse Elephant Soldiers

COLD - Chronic Obstructive Lung Disease

AIM - Ambition In Mind

DATE - Day And Time Evolution

TEA - Taste & Energy Admitted

PEN - Power Enriched in Nib

NYLON - NewYork LONdon (Manufacturing place)

SMILE - Sweet Memories In Lips Expression

BYE - Be with You Everytime

August 27, 2010

நட்பு.. நட்பு..

வெறுக்காதே  இதயத்தை
அறுக்காதே


மௌனத்தை நிறுத்து
என்னை கொஞ்சம்
திருத்து...


கணக்கில்லா காலம்
உன்னுடன் குப்பை கொட்ட 
உனக்கில்லா வார்த்தையா
என்னை திட்ட?


என்றும் உன்
"நண்பேன் டா.......  "
"நண்பேன் டா.......  "
"நண்பேன் டா.......  "
........................
.............
......

August 07, 2010

ஆத்திக நண்பனே

உன்  வியர்வை  நீரால்
செடி  ஒன்று  வளர்த்தாய் 
ண்பனே

அதன்

முள்ளிடம்  பூக்கும்  பணத்தை  பரித்து
கோயில் 
கல்லிடம்  கொட்டி வணங்கினாய்
ண்பனே

ஒவ்வொரு  செயலுக்கும்  முன்பாய்

எல்லாம்  அவன்  செயல்  என்பாய்

கடவுளும்  ஞானமும்  

இரு  கண்கள்  என்றாயே

உன்  இரு  கண்களும்   பகையாளி

என்று நீ அறியாய்  ந
ண்பனே 

முடியாது  என்றும்

உன்
ஒரு  கண்  மறு  கண்ணை
சந்திக்க

ண்பனே
நீ  கொஞ்சம்  சிந்திக்க


August 05, 2010

ஐரோப்பிய நாடு Vs அரபு நாடுஐரோப்பிய  நாடுகளில் வஞ்சனை இல்லாமல் பெய்யும் மழை, ஏன் அரபு நாடுகளில் குறைவாக பெய்கிறது?
.
.
.
.
.
.


காரணம்...
.
.
.
.
.
.

 ஐரோப்பா:அரபு:June 08, 2010

கலப்பின காமெடி

June 07, 2010

நிலை ஒன்று இல்லை
கணம் ஒன்று போதும்
கண் மூடி திறக்க

நிலை ஒன்று இல்லை
நினைத்தவை கிடைக்க

குணம் ஒன்று வேண்டும்
கிடைத்ததை கொடுக்க

திறன் ஒன்று இல்லை
தினம் தினம் படைக்க

மனம் ஒன்று வேண்டும்
மறந்ததை மறக்க 


June 05, 2010

பொய்கூ பகுதி 1


செருப்பு
------------
ஒருவர் பயணம் செய்ய  
தேவை இரு படகு மிளகாய்
------------- 
மழைக்கு உதவா
விரிக்க முடியா
சிறிய குடை 
விளக்கு 
-------------
நெருப்புக்கும்  எண்ணைக்கும் திருமணம்
திரி என்னும் தாலியில்  


பேனா
---------
 தன் உதிரம் உமிழுந்து
உயிரை விடும் சேவகன்
பேனா 
மரம்
--------

தரைக்கு அடியில் 
தாடி வளர்க்கும் 
ஞானி


June 01, 2010

பண்டைய தமிழரின் கணித அளவைக் கூறுகள்
பழம் நூல்களை ஆய்வு செய்யும்போது எம் தமிழர் எவ்வளவு அறிவாளிகளாகவும், நுண்ணிய சிந்தனை உடையவர்களாகவும் திகழ்ந்திருக்கிறார்கள் என்று மலைப்பாக இருக்கிறது.. பெருமையாகவும் இருக்கிறது.


ஒன்று என்ற எண்ணும், அதன் பல கூறுகளும்..

1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/57511466188800000 0 - வெள்ளம்
1/57511466188800000 000 - நுண்மணல்
1/23238245302272000 00000 - தேர்த் துகள்.


 
@ நீட்டலளவு..

10 கோன் - 1 நுண்ணணு
10 நுண்ணணு - 1 அணு
8 அணு - 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் - 1 துசும்பு
8 துசும்பு - 1 மயிர்நுணி
8 மயிர்நுணி - 1 நுண்மணல்
8 நுண்மணல் - 1 சிறுகடுகு
8 சிறுகடுகு - 1 எள்
8 எள் - 1 நெல்
8 நெல் - 1 விரல்
12 விரல் - 1 சாண்
2 சாண் - 1 முழம்
4 முழம் - 1 பாகம்
6000 பாகம் - 1 காதம்(1200 கெசம்)
4 காதம் - 1 யோசனை

@ பொன்நிறுத்தல்..

4 நெல் எடை - 1 குன்றிமணி
2 குன்றிமணி - 1 மஞ்சாடி
2 மஞ்சாடி - 1 பணவெடை
5 பணவெடை - 1 கழஞ்சு
8 பணவெடை - 1 வராகனெடை
4 கழஞ்சு - 1 கஃசு
4 கஃசு - 1 பலம்

@ பண்டங்கள் நிறுத்தல்..

32 குன்றிமணி - 1 வராகனெடை
10 வராகனெடை - 1 பலம்
40 பலம் - 1 வீசை
6 வீசை - 1 தூலாம்
8 வீசை - 1 மணங்கு
20 மணங்கு - 1 பாரம்

@ முகத்தல் அளவு..

5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி

@ பெய்தல் அளவு..

300 நெல் - 1 செவிடு
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி
5 மரக்கால் - 1 பறை
80 பறை - 1 கரிசை
48 96 படி - 1 கலம்
120 படி - 1 பொதி
____________ ______

 

கால அளவு..

2 கண்ணிமை = 1 நொடி
2 கைநொடி = 1 மாத்திரை
2 மாத்திரை = 1 குரு
2 குரு = 1 உயிர்
2 உயிர் = 1 சணிகம்
12 சணிகம் = 1 விநாடி
60 விநாடி = 1 விநாடி-நாழிகை
2 1/2 நாழிகை = 1 ஓரை
3-3 1/2 நாழிகை = 1 முகூர்த்தம்
2 முகூர்த்தம் = 1 சாமம்
4 சாமம் = 1 பொழுது
2 பொழுது = 1 நாள்
15 நாள் = 1 பக்கம்
2 பக்கம்-30 நாள் = 1 மாதம்
6 மாதம் = 1 அயனம்
2 அயனம் -12 மாதம் = 1 ஆண்டு
60 ஆண்டு = 1 வட்டம்
___________ ______

எண்ணல் அளவை..

ஒன்றிலிருந்து கோடி வரை அனைவரும் அறிந்தவையே....கோடிக்கு பிறகான எண்களின் பெயர்களை தெரிந்து கொள்ளுங்கள்.

10கோடி - 1அற்புதம்
10அற்புதம் - 1நிகற்புதம்
10நிகற்புதம் - 1கும்பம்
10கும்பம் - 1கணம்
10கணம் - 1கற்பம்
10கற்பம் - 1நிகற்பம்
10நிகற்பம் - 1பதுமம்
10பதுமம் - 1சங்கம்
10சங்கம் - 1சமுத்திரம்
10சமுத்திரம் - 1ஆம்பல்
10ஆம்பல் - 1மத்தியம்
10மத்தியம் - 1பரார்த்தம்
10பரார்த்தம் - 1பூரியம்

May 24, 2010

திரும்ப கிடைக்கும்மா?


தெருவெல்லாம் ஜனக்கூட்டம்
ஆங்காங்கே  புலியாட்டம்


உறுமி மேளம் உரக்க கொட்டும்
உச்சியில் சூரியன் இருக்கும் மட்டும்


ஐஸ் வண்டியை மறைத்திடும்
சிறுசு கூட்டம்
சரக்கில் வேட்டியை மறந்திடும்
பெரிசு கூட்டம்


வானத்தையும் கிழித்திடும்
வேட்டு சத்தம்
தலை உருண்டோடி தெரிக்குது
ஆட்டு ரத்தம்


எலும்புக்கும் சதைக்கும்
அலைகின்ற இலங்கை போல 
போர் ஒன்னு நடக்குது பந்தியில   


சூரியனில் ஒளி தீரும்
சாயல் பொழுது 
குழல் விளக்கு கண்ணடிக்கும்
சாமப்பொழுது 


பச்சை மஞ்சள் தாவணிகள்
வளையல் சத்தம்
மாமர மறைவினிலே
திருட்டு முத்தம்


பல்லக்கில் ஆடி வரும் குலசாமி
தள்ளாடி தூக்கி வரும் குடிசாமி


நெத்தியில் தாய்  இட்ட
திருநீறு வாசம்
கண் மூடி நினைக்கையில்
இன்னுமும் வீசும் 
    
இவையாவும் ரசிக்க
இன்று விடுமுறை இல்லை
இந்த வருஷம் நான்
ஊரில் இல்லை


தகவல் தொழில்நுட்ப துறையில்
தலைய விட்டேன்
என் கிராமத்து வாழ்க்கைய
தவற விட்டேன்
 

வாலிபா வா வா...

Cricket players


Bollywood Actors

But our Super star...

.
.
.
.
.
.
.
.
.
.
.
.

.
.
.
.
.
.

.
.
.
.
.
.
.


COOL....
May 21, 2010

கசந்து போன காலம்


நீயும் நானும் 
நாம் ஆகி போன காலம்


வருங்காலம் பற்றி
வாய்வலிக்க பேசிய நேரம்


ஊடலும் கூடலும்
குழவிய தழுவலும்


கண்ணீரால் அழிந்த எழுத்தை
தாங்கி வந்த கடிதத்தையும்


வர வேண்டாம் என சொல்லி
தந்த அழைப்பிதழையும்என் குழந்தை என சொன்னபோதும்
நம் குழந்தை என காதில் கேட்ட கணம் 


கணவன் - மனைவி ஆனோம்
நீ உன் கணவனுக்கும்
நான் என் மனைவிக்கும்  


கட(ச)ந்த காலத்தை
மறந்தாலும்..
மறக்க நினைத்தாலும்.. 


கண்ணின் ஓரம் சிறிதாய் ஈரம்..


May 18, 2010

முதலாம் ஆண்டின் நெஞ்சம் நெகிழ்ந்த நினைவு வணக்கங்கள்

எங்கள் புருவங்கள் தாழ்ந்துள்ளன
எங்கள் இமைகள் குவிந்துள்ளன
எங்கள் பற்கள் கண்டிப்போயுள்ளன
நாங்கள் குனிந்தே நடந்து செல்கின்றோம்

எங்களை நீங்கள் ஆண்டு நடத்துக
எங்களை நீங்கள் வண்டியில் பூட்டுக
எங்களை முதுகில் கசையால் அடிக்குக
எங்கள் முதுகு தோல்வியில் துவண்டுபோகட்டும்

தாழ்ந்த புருவங்கள் ஒருநாள் நிமிரும்
கவிந்த இமைகள் ஒருநாள் உயரும்
இறுகிய உதடுகள் ஒருநாள் துடிக்கும்
கண்டிய பற்கள் ஒருநாள் நறுக்கும்

அதுவரை நீங்கள் எங்களை ஆளுக
அதுவரை உங்கள் வல்லம் ஓங்குக !கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஓர் இடம். தமிழ்செல்வனும் டாக்டர்.
விக்ரமசிங்கவும் பேசிக்கொண்டிருக்கும்போது புலிகள் சூழ்ந்துவிடுவார்கள்.
அப்போது, தான் தமிழன் தான் என நிரூபிக்க தமிழ்செல்வன் ஓர் கவிதை
பாடுவார்.


(சண்முகம் சிவலிங்கத்தின் மரணத்துள் வாழ்வோம் கவிதைத் தொகுப்பிலிருந்து))

சிங்கள இனவெறிப் பசிக்குள் அகப்பட்டு இரையாகிப் போன பல்லாயிரக் கணக்கான எம்மின உறவுளின் ஈரம்தோய்ந்த முதலாம் ஆண்டின் நெஞ்சம் நெகிழ்ந்த நினைவு வணக்கங்கள்...


May 13, 2010

படித்தவுடன் மறந்து விடவும்
  

இரண்டு நபர்கள், ஒரு அமெரிக்கன், ஒரு இந்தியன் பாரில் உட்கார்ந்து குடித்துக் கொண்டிருந்தார்கள். இந்தியன் அமெரிக்கனைப் பார்த்து,

" உங்களுக்குத் தெரியுமா? எனது பெற்றோர்கள் என்னைக் கட்டாயப்படுத்தி, ஹோம்லி பொண்ணுன்னு சொல்லி ஒரு கிராமத்திலிருந்து ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணி வைச்சுட்டாங்க. நான் ஒரு தடவைக் கூட அவளை சந்திச்சதே இல்லை. நாங்க இதைத்தான் அரேஞ்ஜுடு மேரேஜ்னு சொல்லுவோம். நான் விரும்பாத பெண்ணையோ அல்லது எனக்குத் தெரியாத பெண்ணையோ திருமணம் செய்து கொள்ள எனக்கு விருப்பம் இல்லை. நான் தெளிவாகச் சொல்லியும் அவர்கள் கேட்காததால், இப்போ பாருங்க ஏகப்பட்ட குடும்பப் பிரச்சனையில் மாட்டிக் கொண்டு முழிக்கிறேன்"

இதைக் கேட்ட அமெரிக்கன்,

" காதல் கல்யாணத்தைப் பற்றி தெரிஞ்சுக்கனும்னா, என் கதையை சொல்றேன் கேளுங்க.

நான் ஒரு விதவையை ரொம்ப ஆழமா ஒரு மூன்று வருடம் காதலிச்சு, டேட்டிங்கெல்லாம் போனப்புறம் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். சில வருடங்களுக்குப் பின் என்னோட அப்பா, என்னுடைய ஸ்டெப் டாட்டர் மீது காதல் கொண்டு அவளை கல்யாணம் செய்துக் கொண்டார். அதனால எனக்கு எங்க அப்பா மாப்பிள்ளையாகிவிட்டார், நான் அவருக்கு மாமனார் ஆகிவிட்டேன்.

சட்டப்படி பார்த்தோம்னா, என் மகள் எனக்கு அம்மாவாகவும், என் மனைவி எனக்கு பாட்டியாகவும் ஆகிவிட்டார்கள்.

ரொம்ப பிரச்சனை எப்போ வந்துச்சுன்னா, எனக்கு மகன் பிறந்தப்போ. என்னோட பையன் எங்க அப்பாவுக்குத் தம்பி முறை ஆகிவிட்டதால், எனக்கு அவன் சித்தப்பா ஆகிவிட்டான்.


பிரச்சனை ரொம்ப ரொம்ப பெருசு ஆனது எப்போன்னா, எங்க அப்பாவுக்கு பையன் பிறந்தப்போ. என்னோட அப்பாவோட பையன் அதாவது என் தம்பி எனக்கு பேரன் ஆகிவிட்டான்.

கடைசியா பார்த்தோம்னா, நானே எனக்கு தாத்தாவாகவும், நானே எனக்கு பேரனாகவும் ஆயிட்டேன்.

நீங்க என்னடான்னா, உங்களுக்கு குடும்ப பிரச்சனை இருக்குன்னு சொல்லறீங்க!!!!"
(படித்தவுடன் மறந்து விடவும்.. ரொம்பவும் யோசிக்காதிங்க ..!!! )


May 12, 2010

பலே பலே பொன்மொழிகள்

பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும் 
- ஸ்காட்லாந்து பொன்மொழி

துன்பம் துன்பம் என்று சலித்துக் கொண்டு என்ன பயன்? உடம்பிலிருக்கும் ஒன்பது ஓட்டைகளோடு அதுவும் பத்தாவது ஓட்டை என்று முடிவு கட்டு : வாழ்வுக்கு நியாமும், நெஞ்சிற்கு நிம்மதியும் கிடைக்கும். 
- கவியரசு கண்ணதாசன்

உழைப்பு வறுமையை மட்டும் விரட்டவில்லை; தீமையையும் விரட்டுகிறது.
- வால்டேர்

அழகான பெண், கண்களுக்கு ஆனந்தமளிக்கிறாள். குணமான பெண் இதயத்திற்கு குதூகலமளிக்கிறாள். முதலாமவள் ஒரு ஆபரணம், இரண்டாமவள் ஒரு புதையல் 
- நெப்போலியன்

ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கிவிடுகிறாள். 
- ஆஸ்கார் ஒயில்ட்

பெண்களில் இரண்டே பிரிவினர் தாம் இருக்கிறார்கள். ஒன்று அழகானவர்கள். மற்றொன்று அழகானவர்கள் என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள் 
- பெர்னாட்ஷா

அழகான பெண்களுக்குப் பிறக்கும்போதே நிச்சய தார்த்தம் நடந்து விடுகிறது.
- ஹாபர்ட்.

பெண் இல்லாத வீடும், வீடு இல்லாத பெண்ணும் மதிப்பு இல்லாதவை! 
- பாலஸ்தீனப் பழமொழி

ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. 
- ப்ரெட்ரிக் நீட்சே

நீங்கள் போருக்குச் செல்லும்போது ஒரு தடவை பிரார்த்தனை செய்யுங்கள். கடல் பயணத்திற்குச் செல்லும்போது இரண்டு தடவை பிரார்த்தனை செய்யுங்கள் ஒரு பெண்ணை மனைவியாக ஏற்கும் போது மூன்று தடவை பிரார்த்தனை செய்யுங்கள்.
 
- வின்ஸ்டர் லூயிஸ்யாரோ சொன்னது

தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறுப்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்

குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும்

சுயநலம் என்பது சிறு உலகம். அதில் ஒரே ஒரு மனிதன்தான் வாழ்கிறான்

வெற்றியின் ரகசியம் - எடுத்த கரியத்தில் நிலையாக இருத்தல்

பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம்
இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.

மது உள்ளே சென்றால் அறிவு வெளி செல்கிறது நண்பனைப் பற்றி நல்லது பேசு. விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே!

அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே!


செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை

நாக்கு கொடிய மிருகம். அதை எப்போதும் கட்டியே வை!

பறக்க விரும்புபவனால் படர முடியாது.

மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழக்கை.

ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.


.
.
.
.
.
.
.
.
.

இதனால நான் சொல்ல வரது என்னனா....
.
.
.
.
.
.
.
.
.
.
.
ஆணியே புடுங்க வேணாம்...  


இதையும் பார்க்கலாமே...

Related Posts with Thumbnails