January 28, 2010

திரை விமர்சனம் எழுதும் அதிமேதாவிகளின் கவனத்துக்கு:

ஒரு காரியத்தை ரொம்ப சிரத்தையா செய்து வரும் நீங்கள், அந்த காரியம் நன்றாக
முடியும் என்ற நம்பிக்கையில் தானே செய்கிறீர்கள்? அது போல தான் படம்
எடுக்குறதும். வெறும் 50 ரூபாய்க்கு டிக்கெட் வாங்கி படம் பார்க்கும்
நீங்கள் இவ்வளவு யோசிக்கும் போது, படம் தயாரிப்பாளர் எவ்வளவு
யோசிச்சிருப்பாரு? அப்போதைக்கு அவர் சரின்னு நினைக்கும் படத்துக்கு தான்
பணம் கொடுப்பாரு அது சரியா தப்பான்னு அவர் தான் பீல் பண்ணனும் ஏன்ன்னா அது
அவரு பணம்.


படம் பாத்து மக்களுக்கு புடிக்கலைன்னா அத மக்கள் சொல்லணும் அதவிட்டு நீங்க
என்னமோ அவதாரம் எடுத்து வந்த மாதிரி விமர்சணம் எழுதுறது! தெரியாம தான்
கேக்குறேன் மக்களோட கண்ணோட்டமும் உங்களோட கண்ணோட்டமும் ஒரே மாதிரியா
இருக்கும்? ஒரு சப்ப கதையா கூட இருக்கட்டும் உனக்கு புடிக்காதது
அடுத்தவனுக்கும் கண்டிப்பா புடிக்கும் சாமி! படம் பாக்க போறவனைக்கூட
விமர்சணம்ங்குற பேர்றல உங்களோட கண்ணோட்டத்தை எழுதி போக விடாம பண்றது என்ன
நியாயம் பாஸ்? அடுத்தவன் சோத்துல மண்ணவாரி போடுறது நமக்கு தான் கை வந்த
கலையாச்சே! படம் விமர்சனம் பண்ணுறவனுங்க எல்லாம் சேந்து ஒரு படம் எடுங்க
நல்லா ஓடுதான்னு பாப்போம் ? 
உங்களுக்கு புடிக்கலைன்னா நீங்க போயி பாக்காதீங்க, அத விட்டுட்டு அடுத்தவனை
பாக்காதன்னு சொல்ற மாதிரி ஏன் எழுதுறீங்க. நீங்க ஒரு படம் எடுத்து அது
மொக்கையானா உங்களுக்கு என்ன மாதிரி பீலிங்ஸ் இருக்குமோ அது போல தான்
தயாரிப்பாள்ரும். அவரும் மனுசன் தான்யா. எப்படி அவரு உங்க வியாபாரத்தில்
தலையிடுவதில்லையோ அது போல நீங்களு அவருடைய வியாபாரத்தை விமர்சனம் செய்வது
கூடாது.. ஒரு படம்ங்குறது உங்களுக்கு மட்டும் தான் 2 1/2 மணி நேர கேளிக்கை
ஆணா இதுதான் பல பேருக்கு வாழக்கை. அடுத்தவனை எப்போதும் உங்க கண்ணோடத்தில
பாக்காதீங்க பாஸ் ! அடுத்தவன் பொண்டாட்டி என்ன புடவை கட்டனும்னு எப்படி
நீங்க சொல்ல உரிமை இல்லையோ அது போல தான் இதுவும்.  

குறிப்பு :‍ இது தமிழ்பட விமர்சனம் எழுதும் எல்லோருக்கும் பொருந்தும்..
நன்றி : கணேஷ் குமார் கிருஷ்

12 comments:

 1. ஒரு படம்ங்குறது உங்களுக்கு மட்டும் தான் 2 1/2 மணி நேர கேளிக்கை
  ஆணா இதுதான் பல பேருக்கு வாழக்கை. அடுத்தவனை எப்போதும் உங்க கண்ணோடத்தில
  பாக்காதீங்க பாஸ்

  நல்ல இருக்கு

  நன்றி,
  ஜோசப்
  http://www.tamilcomedyworld.com

  ReplyDelete
 2. ///அடுத்தவனை எப்போதும் உங்க கண்ணோடத்தில
  பாக்காதீங்க பாஸ் ! அடுத்தவன் பொண்டாட்டி என்ன புடவை கட்டனும்னு எப்படி
  நீங்க சொல்ல உரிமை இல்லையோ///

  வெங்காயத்தோல் மாதிரி(இல்லை அறைக்குறை) உடுத்திவந்தால் ஒத்துக்கொள்வீர்களா???. நல்லாயில்லைன்னு சொல்வீங்களா????.
  அட்வைஸ் ஒருவரை முன்னேற்றவே உதவும்..

  ReplyDelete
 3. http://vennirairavugal.blogspot.com/ இந்த வலையில் நண்பர் எழுதிய ஒரு கட்டுரையை பார்த்து ரொம்ப கோபத்துல இந்த போஸ்டை போட்ரிகீங்க போல..ஆனால் அந்த நண்பர் சொல்ல வந்த கருத்து சமுதாய மாற்றங்கள் கொண்டு வரக்கூடிய நல்ல படங்கள் வரவேண்டும் என்பதைத்தான் ஆனால் சொன்ன விதம் கொஞ்சம் தவறாகி வேறு அர்த்தம் கொடுத்து விட்டது. ...உங்களுக்கு பதில் பின்னூட்டத்தில் சொல்லி இருக்கிறார் ,கவனிதீர்கள...உங்க கோபம் ரொம்ப நியாயம்தான்....உங்க தளத்துல நிறைய விஷயங்கள் ரசிக்கும் படியா இருக்கு வாழ்த்துக்கள் தொடருங்கள்....

  ReplyDelete
 4. /இது தமிழ்பட விமர்சனம் எழுதும் எல்லோருக்கும் பொருந்தும்..

  தமிழ்ப்படம் பாத்துட்டீங்களா?எப்படியிருக்கு?

  ReplyDelete
 5. ஹா ஹா!

  இப்ப நீங்க சொல்றது கூட அறிவுரைதானுங்களே!

  அவரவர் எண்ணம் அவரவருக்கு.

  நீ இப்படி எழுதாதே, நீ இதைச் செய்யாதேனு எழத உங்களுக்கு எப்படி எண்ணம் வந்தது? அதுபோலத்தான் அவர்களுக்கும்.

  இது உங்கள் கண்ணோட்டம், அது அவர்கள் கண்ணோட்டம்.

  அவரவருக்கு சுயபுத்தி என்று ஒன்று உண்டு. எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்பதை அவரவரே முடிவு செய்வார். இதுதான் சரி, இதுதான் தவறு என பிறர் சொல்வதை அப்படியே நம்பி செயல்படுமளவுக்கு எவரும் சிந்தனையில்லாமல் இல்லை.

  போகாதே என சொன்னால் போகாமல்தான் இருக்கப் போகிறார்களா, ஏன் போகாதே என சொல்கிறான், போய்த்தான் பார்ப்போமே என இருப்பவர்களும் உண்டு.

  உங்கள் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கிறேன் இப்போது, நீங்க சொல்றதும் சரிதானுங்க.

  ReplyDelete
 6. பதிவுலகில திரை விமர்சணம் எழுதும் பலரும் திரையுலகில் வாய்ப்பு தேடி அழைந்து நொந்து நூலானவர்கள். தனக்கு கிடைக்காத வாய்ப்பு மத்தவங்களுக்கு கிடைக்கும் பொழுது எழும் பொறாமையில் எழுதுவது தான் இதெல்லாம். இவர்கள் எல்லாரும் ஒரு வகையான மன அழுத்ததிலே இருப்பவர்கள். அவர்கள் எழுதும் விமர்சணத்தை கொஞ்சம் கவணமாக பார்த்தால் அதில் ஒரு விசியத்தை கண்டிப்பாக குறிப்பிட்டிருப்பார்கள், நல்ல ஸ்கோப் உள்ள கதை புகுந்து விளையாடி இருக்கலாம் ஆனா திரைக்கதையில் கோட்டை விட்டுவிட்டார்கள்ன்னு ஒரு பிட்டு இருக்கும். அதாவது இவர்களிடம் அந்த வாய்ப்பை கொடுத்தால் பின்னி பெடலெடுத்திருப்பார்களாம்.


  திரைக்கதை ஓட்டை, சொத்த, சொள்ளன்னு சொல்லும் இவர்கள் நல்ல திரைக்கதையோடு போய் எதாவது தயாரிப்பாளர்களிடம் சொல்லி படம் எடுத்து தமிழ்படத்தை அடுத்த கட்டத்திற்க்கு எடுத்து செல்லட்டுமே.....உள்ள கூட விட மாட்டாங்க

  சக கலைஞனை எடுத்த படைப்பை குத்தம் சொல்லி கிட்டே இருப்பவர்கள் எப்படி அத்துறையில் மேல வர முடியும்.

  திரைத்துரையில் எந்த கலைஞனுமே தான் நினைத்தை மட்டும் எடுத்து விட முடியாது. வியாபார நோக்கத்திற்காக சிலவற்றை சேர்த்தோ கழித்தோ தான் படம் எடுக்க முடியும்.

  பல கோடி செலவு செய்த படம் உங்களுக்கு பிடிக்க வில்லை என்றால் ஒரு ரெண்டு வாரம் அமைதியாக இருக்கலாமே, உங்களுக்கு பிடிக்காத படம் மற்றவர்களுக்கும் பிடிக்கலாம். ஆனா இவங்க படம் வெளியான முதல் நாள் முதல் ஷோ பாத்துட்டு(வேற வேலை) படம் கடி, தாங்க முடியல, ஊத்திகிச்சு, தலை வச்சு படுக்காதீங்கன்னு ஊரெல்லாம் பரப்ப்புவாங்க. எவ்வளவு நல்ல எண்ணம் பாருங்க.

  உங்க பதிவை படிச்சிட்டு அதனால அந்த படத்தை நாலு பேர் பாக்கலைனா அந்த நஷ்டம் உங்கனால வந்தது தானே.

  விட்டு தள்ளுங்க

  ReplyDelete
 7. நன்றி JesusJoseph... நன்றி கமலேஷ்...

  ReplyDelete
 8. ///தண்டோரா said... தமிழ்ப்படம் பாத்துட்டீங்களா?எப்படியிருக்கு? ///

  இன்னும் இல்லை நண்பரே..

  ReplyDelete
 9. தர்மா உங்கள் கருத்தே என் கருத்தும்...கடலூரில் நீங்க... எங்க இருக்கிங்க...நான் கூத்தப்பாக்கம்...

  ReplyDelete
 10. // தர்மா உங்கள் கருத்தே என் கருத்தும்...கடலூரில் நீங்க... எங்க இருக்கிங்க...நான் கூத்தப்பாக்கம்... //

  நன்றி ஜாக்கி சேகர்... நான் கடலூர்-பாண்டி border "கன்னி கோயில்" ... :)

  ReplyDelete
 11. ஒரு வரி கமெண்டுக்கெல்லாம் உடனடி பதில் தரும் நீங்கள், தம் கட்டி கமெண்ட் போட்ட எனக்கும் ராதாகிருஷ்ணன் என்கிற நண்பருக்கும் ஒரு hi கூட சொல்லாமல் இருக்கும் அரசியல் புரியலையே.

  வந்திருக்க கூடாதோ

  ReplyDelete
 12. //வந்திருக்க கூடாதோ?//

  தாமதத்திற்கு மன்னிக்கவும் damildumil மற்றும் வெ.இராதாகிருஷ்ணன்
  அறிவாளிகளுக்கு பதில் எழுத சற்று அவகாசம் தேவைப்படுகிறது.. (சமாளிச்சிட்டோம்ல... )

  மற்றபடி "வந்திருக்க கூடாதோ?" என்றேல்லாம் நினைக்க வேண்டாம்...

  ReplyDelete

Write you comments here :)

இதையும் பார்க்கலாமே...

Related Posts with Thumbnails