February 05, 2010

மதிக்கவும் செய்வேன்.. மிதிக்கவும் செய்வேன்..




காட்டுப்பாதையில் நான்
கால் நடையோடு கால் நடையாக
சென்ற வேளையில்...


உன்னை அறிமுகப்படுத்தியது
என் மாமன்..


இதுவரை உன்னை பிரிந்து நான்
எங்காவது போனதுண்டா?


காடோ.. மேடோ.. 
என்னை நீ சுமக்கிறாய்..


பக்கத்தூரில் பள்ளி..
நீ இன்றி சாத்தியமா
என் எட்டாம் வகுப்பு படிப்பு?


உன்னை
மதிக்கவும் செய்வேன்
மிதிக்கவும் செய்வேன்


மிதிவண்டியே!!!


February 02, 2010

கை விரலில் கணினி - மந்திர இந்தியன் (உண்மை)



அன்று என் பிறந்தநாள்


நண்பன் வீடு ஆறாவது மாடியில் 
ஏறிச்சென்று  கதவைத்  தட்டினேன்
ரகசிய சிரிப்புடன் என்னை உள்ளே இழுத்தான்


மெழுகை தலையில் சுமந்த கேக்
"ஏன்டா இதெல்லாம்" என கேட்பதற்குள்
மெழுகை அனைத்து கேக்கை
வெட்டி வீடே ரெண்டு பட்டது


நான் சைகையால் கேட்க்க
கையை நீட்ட
அவன் அம்மா என் வாயில்
பா(யா)சத்தை ஊட்டி வாயடைத்தார்
முடியாமல் குடித்தேன்


அவன் குட்டித் தங்கை ஓடி வந்து
ஐஸ்கிரீமை  நீட்ட ஆசையாக வாங்கினேன்
நான் மீண்டும் கேட்க முயல
அவன் "அதெல்லாம் நைட்டு
பாத்துக்கலாம் டா" என சொல்லிவிட்டு


டைனிங்  டேபிளுக்கு அழைத்துச் செல்ல
பல வகை பண்டங்கள் பழங்கள்
நான் தேடியது இல்லை


சரி நானே எடுத்துக்கொள்ளலாம் என
எழுந்த  நேரத்தில்
அவன் அப்பா "எங்கப்பா போற?
இன்னைக்கு முழுக்க இங்கே தான் இருக்கனும்" என்றார்  


"கண்டிப்பா" என சொல்கையில் கண்கலங்க


யாருக்கும் புரியவில்லை
என் தண்ணீர் தாகம்


February 01, 2010

குடி(கார) மீன்



சந்தோஷத்தில்
   நீ துள்ளிக் குதிக்கிறாய்
   நான் விண்ணில் பறக்கிறேன்


தண்ணியில்
  நடக்கிறேன்..  விழுகிறேன்..  தத்தளிக்கிறேன்..
நீயோ
  மிதக்கிறாய்..  நீந்துகிறாய்..  துள்ளுகிறாய்..


நாம் தண்ணியில் அழுவதால்
அது யாருக்கும்
    தெரிவதும் இல்லை
    புரிவதும் இல்லை 


நான் தண்ணியில் விழும்போதும்
நீ தண்ணியை விட்டு வெளியே விழும்போதும்



முதலில் துள்ளுவோம்.....
பிறகு மடிவோம் .....
   என் செல்ல மீன்குட்டியே....


 

யாரவது விளக்க முடியுமா?

கடந்த வாரம் ஆனந்த விகடனில் வெளியான கவிதை இது...
இதற்கு யாராவது தெளிவான விளக்கம் தர முடியுமா?


குறிப்பு :   தலைப்பை கண்டிப்பாக விளக்க வேண்டும்...



0 - விலிருந்து  180

கொடிகளில் என்ன
உலர்த்தப்படுகின்றன
துணிகளா?
ஈரமா?



இதையும் பார்க்கலாமே...

Related Posts with Thumbnails