February 02, 2010

அன்று என் பிறந்தநாள்


நண்பன் வீடு ஆறாவது மாடியில் 
ஏறிச்சென்று  கதவைத்  தட்டினேன்
ரகசிய சிரிப்புடன் என்னை உள்ளே இழுத்தான்


மெழுகை தலையில் சுமந்த கேக்
"ஏன்டா இதெல்லாம்" என கேட்பதற்குள்
மெழுகை அனைத்து கேக்கை
வெட்டி வீடே ரெண்டு பட்டது


நான் சைகையால் கேட்க்க
கையை நீட்ட
அவன் அம்மா என் வாயில்
பா(யா)சத்தை ஊட்டி வாயடைத்தார்
முடியாமல் குடித்தேன்


அவன் குட்டித் தங்கை ஓடி வந்து
ஐஸ்கிரீமை  நீட்ட ஆசையாக வாங்கினேன்
நான் மீண்டும் கேட்க முயல
அவன் "அதெல்லாம் நைட்டு
பாத்துக்கலாம் டா" என சொல்லிவிட்டு


டைனிங்  டேபிளுக்கு அழைத்துச் செல்ல
பல வகை பண்டங்கள் பழங்கள்
நான் தேடியது இல்லை


சரி நானே எடுத்துக்கொள்ளலாம் என
எழுந்த  நேரத்தில்
அவன் அப்பா "எங்கப்பா போற?
இன்னைக்கு முழுக்க இங்கே தான் இருக்கனும்" என்றார்  


"கண்டிப்பா" என சொல்கையில் கண்கலங்க


யாருக்கும் புரியவில்லை
என் தண்ணீர் தாகம்


10 comments:

  1. நல்லாருக்கு தர்மா.

    ReplyDelete
  2. ஊக்கத்திற்கு நன்றி பா.ராஜாராம் அவர்களே...

    ReplyDelete
  3. நிறைய பேர் தனக்கு என்ன பிடிக்குமோ அதுவே அடுத்தவர்க்கும் பிடிக்கும் என்று நினைக்கிறார்கள். பிறர் தேவை என்ன என்றே புரிந்து கொள்வதில்லை. நல்ல கவிதை.

    ReplyDelete
  4. சரிதான் நாய்க்குட்டி மனசு அவர்களே....
    ஒருவர் மீது காட்டும் அதீத வெறுப்பும், அதீத அன்பும் அவரை சங்கடப்படுத்தும்...

    ReplyDelete
  5. ஹா.. ஹா.. ஹா.. கடைசி வரியில் சிரித்தேவிட்டேன்..

    ReplyDelete
  6. அடுத்தவரின் தேவையை அறிந்து செயல்படுவது சிலரே....

    அதை தெளிவாக எடுத்துரைத்ததாய் நண்பா...

    ReplyDelete
  7. நன்றி வினோத் அவர்களே...

    ReplyDelete
  8. நன்றி rajesh அவர்களே...

    ReplyDelete
  9. ரொம்ப நல்லா இருக்கு தர்மா. உங்க கிட்ட கத்துகனும் கவிதை எழுத.

    ReplyDelete
  10. சக bloggers (நீங்கள் உட்பட) எழுதும் கவிதைகளோடு ஒப்பிடும் போது, என்னை பொறுத்தவரை இது மிகவும் சாதாரண கவிதை தல...

    ReplyDelete

Write you comments here :)

இதையும் பார்க்கலாமே...

Related Posts with Thumbnails