May 24, 2010

திரும்ப கிடைக்கும்மா?


தெருவெல்லாம் ஜனக்கூட்டம்
ஆங்காங்கே  புலியாட்டம்


உறுமி மேளம் உரக்க கொட்டும்
உச்சியில் சூரியன் இருக்கும் மட்டும்


ஐஸ் வண்டியை மறைத்திடும்
சிறுசு கூட்டம்
சரக்கில் வேட்டியை மறந்திடும்
பெரிசு கூட்டம்


வானத்தையும் கிழித்திடும்
வேட்டு சத்தம்
தலை உருண்டோடி தெரிக்குது
ஆட்டு ரத்தம்


எலும்புக்கும் சதைக்கும்
அலைகின்ற இலங்கை போல 
போர் ஒன்னு நடக்குது பந்தியில   


சூரியனில் ஒளி தீரும்
சாயல் பொழுது 
குழல் விளக்கு கண்ணடிக்கும்
சாமப்பொழுது 


பச்சை மஞ்சள் தாவணிகள்
வளையல் சத்தம்
மாமர மறைவினிலே
திருட்டு முத்தம்


பல்லக்கில் ஆடி வரும் குலசாமி
தள்ளாடி தூக்கி வரும் குடிசாமி


நெத்தியில் தாய்  இட்ட
திருநீறு வாசம்
கண் மூடி நினைக்கையில்
இன்னுமும் வீசும் 
    
இவையாவும் ரசிக்க
இன்று விடுமுறை இல்லை
இந்த வருஷம் நான்
ஊரில் இல்லை


தகவல் தொழில்நுட்ப துறையில்
தலைய விட்டேன்
என் கிராமத்து வாழ்க்கைய
தவற விட்டேன்
 

வாலிபா வா வா...

Cricket players


Bollywood Actors

But our Super star...

.
.
.
.
.
.
.
.
.
.
.
.

.
.
.
.
.
.

.
.
.
.
.
.
.


COOL....
May 21, 2010

கசந்து போன காலம்


நீயும் நானும் 
நாம் ஆகி போன காலம்


வருங்காலம் பற்றி
வாய்வலிக்க பேசிய நேரம்


ஊடலும் கூடலும்
குழவிய தழுவலும்


கண்ணீரால் அழிந்த எழுத்தை
தாங்கி வந்த கடிதத்தையும்


வர வேண்டாம் என சொல்லி
தந்த அழைப்பிதழையும்என் குழந்தை என சொன்னபோதும்
நம் குழந்தை என காதில் கேட்ட கணம் 


கணவன் - மனைவி ஆனோம்
நீ உன் கணவனுக்கும்
நான் என் மனைவிக்கும்  


கட(ச)ந்த காலத்தை
மறந்தாலும்..
மறக்க நினைத்தாலும்.. 


கண்ணின் ஓரம் சிறிதாய் ஈரம்..


May 18, 2010

முதலாம் ஆண்டின் நெஞ்சம் நெகிழ்ந்த நினைவு வணக்கங்கள்

எங்கள் புருவங்கள் தாழ்ந்துள்ளன
எங்கள் இமைகள் குவிந்துள்ளன
எங்கள் பற்கள் கண்டிப்போயுள்ளன
நாங்கள் குனிந்தே நடந்து செல்கின்றோம்

எங்களை நீங்கள் ஆண்டு நடத்துக
எங்களை நீங்கள் வண்டியில் பூட்டுக
எங்களை முதுகில் கசையால் அடிக்குக
எங்கள் முதுகு தோல்வியில் துவண்டுபோகட்டும்

தாழ்ந்த புருவங்கள் ஒருநாள் நிமிரும்
கவிந்த இமைகள் ஒருநாள் உயரும்
இறுகிய உதடுகள் ஒருநாள் துடிக்கும்
கண்டிய பற்கள் ஒருநாள் நறுக்கும்

அதுவரை நீங்கள் எங்களை ஆளுக
அதுவரை உங்கள் வல்லம் ஓங்குக !கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஓர் இடம். தமிழ்செல்வனும் டாக்டர்.
விக்ரமசிங்கவும் பேசிக்கொண்டிருக்கும்போது புலிகள் சூழ்ந்துவிடுவார்கள்.
அப்போது, தான் தமிழன் தான் என நிரூபிக்க தமிழ்செல்வன் ஓர் கவிதை
பாடுவார்.


(சண்முகம் சிவலிங்கத்தின் மரணத்துள் வாழ்வோம் கவிதைத் தொகுப்பிலிருந்து))

சிங்கள இனவெறிப் பசிக்குள் அகப்பட்டு இரையாகிப் போன பல்லாயிரக் கணக்கான எம்மின உறவுளின் ஈரம்தோய்ந்த முதலாம் ஆண்டின் நெஞ்சம் நெகிழ்ந்த நினைவு வணக்கங்கள்...


May 13, 2010

படித்தவுடன் மறந்து விடவும்
  

இரண்டு நபர்கள், ஒரு அமெரிக்கன், ஒரு இந்தியன் பாரில் உட்கார்ந்து குடித்துக் கொண்டிருந்தார்கள். இந்தியன் அமெரிக்கனைப் பார்த்து,

" உங்களுக்குத் தெரியுமா? எனது பெற்றோர்கள் என்னைக் கட்டாயப்படுத்தி, ஹோம்லி பொண்ணுன்னு சொல்லி ஒரு கிராமத்திலிருந்து ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணி வைச்சுட்டாங்க. நான் ஒரு தடவைக் கூட அவளை சந்திச்சதே இல்லை. நாங்க இதைத்தான் அரேஞ்ஜுடு மேரேஜ்னு சொல்லுவோம். நான் விரும்பாத பெண்ணையோ அல்லது எனக்குத் தெரியாத பெண்ணையோ திருமணம் செய்து கொள்ள எனக்கு விருப்பம் இல்லை. நான் தெளிவாகச் சொல்லியும் அவர்கள் கேட்காததால், இப்போ பாருங்க ஏகப்பட்ட குடும்பப் பிரச்சனையில் மாட்டிக் கொண்டு முழிக்கிறேன்"

இதைக் கேட்ட அமெரிக்கன்,

" காதல் கல்யாணத்தைப் பற்றி தெரிஞ்சுக்கனும்னா, என் கதையை சொல்றேன் கேளுங்க.

நான் ஒரு விதவையை ரொம்ப ஆழமா ஒரு மூன்று வருடம் காதலிச்சு, டேட்டிங்கெல்லாம் போனப்புறம் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். சில வருடங்களுக்குப் பின் என்னோட அப்பா, என்னுடைய ஸ்டெப் டாட்டர் மீது காதல் கொண்டு அவளை கல்யாணம் செய்துக் கொண்டார். அதனால எனக்கு எங்க அப்பா மாப்பிள்ளையாகிவிட்டார், நான் அவருக்கு மாமனார் ஆகிவிட்டேன்.

சட்டப்படி பார்த்தோம்னா, என் மகள் எனக்கு அம்மாவாகவும், என் மனைவி எனக்கு பாட்டியாகவும் ஆகிவிட்டார்கள்.

ரொம்ப பிரச்சனை எப்போ வந்துச்சுன்னா, எனக்கு மகன் பிறந்தப்போ. என்னோட பையன் எங்க அப்பாவுக்குத் தம்பி முறை ஆகிவிட்டதால், எனக்கு அவன் சித்தப்பா ஆகிவிட்டான்.


பிரச்சனை ரொம்ப ரொம்ப பெருசு ஆனது எப்போன்னா, எங்க அப்பாவுக்கு பையன் பிறந்தப்போ. என்னோட அப்பாவோட பையன் அதாவது என் தம்பி எனக்கு பேரன் ஆகிவிட்டான்.

கடைசியா பார்த்தோம்னா, நானே எனக்கு தாத்தாவாகவும், நானே எனக்கு பேரனாகவும் ஆயிட்டேன்.

நீங்க என்னடான்னா, உங்களுக்கு குடும்ப பிரச்சனை இருக்குன்னு சொல்லறீங்க!!!!"
(படித்தவுடன் மறந்து விடவும்.. ரொம்பவும் யோசிக்காதிங்க ..!!! )


May 12, 2010

பலே பலே பொன்மொழிகள்

பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும் 
- ஸ்காட்லாந்து பொன்மொழி

துன்பம் துன்பம் என்று சலித்துக் கொண்டு என்ன பயன்? உடம்பிலிருக்கும் ஒன்பது ஓட்டைகளோடு அதுவும் பத்தாவது ஓட்டை என்று முடிவு கட்டு : வாழ்வுக்கு நியாமும், நெஞ்சிற்கு நிம்மதியும் கிடைக்கும். 
- கவியரசு கண்ணதாசன்

உழைப்பு வறுமையை மட்டும் விரட்டவில்லை; தீமையையும் விரட்டுகிறது.
- வால்டேர்

அழகான பெண், கண்களுக்கு ஆனந்தமளிக்கிறாள். குணமான பெண் இதயத்திற்கு குதூகலமளிக்கிறாள். முதலாமவள் ஒரு ஆபரணம், இரண்டாமவள் ஒரு புதையல் 
- நெப்போலியன்

ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கிவிடுகிறாள். 
- ஆஸ்கார் ஒயில்ட்

பெண்களில் இரண்டே பிரிவினர் தாம் இருக்கிறார்கள். ஒன்று அழகானவர்கள். மற்றொன்று அழகானவர்கள் என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள் 
- பெர்னாட்ஷா

அழகான பெண்களுக்குப் பிறக்கும்போதே நிச்சய தார்த்தம் நடந்து விடுகிறது.
- ஹாபர்ட்.

பெண் இல்லாத வீடும், வீடு இல்லாத பெண்ணும் மதிப்பு இல்லாதவை! 
- பாலஸ்தீனப் பழமொழி

ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. 
- ப்ரெட்ரிக் நீட்சே

நீங்கள் போருக்குச் செல்லும்போது ஒரு தடவை பிரார்த்தனை செய்யுங்கள். கடல் பயணத்திற்குச் செல்லும்போது இரண்டு தடவை பிரார்த்தனை செய்யுங்கள் ஒரு பெண்ணை மனைவியாக ஏற்கும் போது மூன்று தடவை பிரார்த்தனை செய்யுங்கள்.
 
- வின்ஸ்டர் லூயிஸ்யாரோ சொன்னது

தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறுப்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்

குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும்

சுயநலம் என்பது சிறு உலகம். அதில் ஒரே ஒரு மனிதன்தான் வாழ்கிறான்

வெற்றியின் ரகசியம் - எடுத்த கரியத்தில் நிலையாக இருத்தல்

பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம்
இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.

மது உள்ளே சென்றால் அறிவு வெளி செல்கிறது நண்பனைப் பற்றி நல்லது பேசு. விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே!

அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே!


செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை

நாக்கு கொடிய மிருகம். அதை எப்போதும் கட்டியே வை!

பறக்க விரும்புபவனால் படர முடியாது.

மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழக்கை.

ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.


.
.
.
.
.
.
.
.
.

இதனால நான் சொல்ல வரது என்னனா....
.
.
.
.
.
.
.
.
.
.
.
ஆணியே புடுங்க வேணாம்...  


இதையும் பார்க்கலாமே...

Related Posts with Thumbnails