May 24, 2010

திரும்ப கிடைக்கும்மா?






தெருவெல்லாம் ஜனக்கூட்டம்
ஆங்காங்கே  புலியாட்டம்


உறுமி மேளம் உரக்க கொட்டும்
உச்சியில் சூரியன் இருக்கும் மட்டும்


ஐஸ் வண்டியை மறைத்திடும்
சிறுசு கூட்டம்
சரக்கில் வேட்டியை மறந்திடும்
பெரிசு கூட்டம்


வானத்தையும் கிழித்திடும்
வேட்டு சத்தம்
தலை உருண்டோடி தெரிக்குது
ஆட்டு ரத்தம்


எலும்புக்கும் சதைக்கும்
அலைகின்ற இலங்கை போல 
போர் ஒன்னு நடக்குது பந்தியில   


சூரியனில் ஒளி தீரும்
சாயல் பொழுது 
குழல் விளக்கு கண்ணடிக்கும்
சாமப்பொழுது 


பச்சை மஞ்சள் தாவணிகள்
வளையல் சத்தம்
மாமர மறைவினிலே
திருட்டு முத்தம்


பல்லக்கில் ஆடி வரும் குலசாமி
தள்ளாடி தூக்கி வரும் குடிசாமி


நெத்தியில் தாய்  இட்ட
திருநீறு வாசம்
கண் மூடி நினைக்கையில்
இன்னுமும் வீசும் 
    
இவையாவும் ரசிக்க
இன்று விடுமுறை இல்லை
இந்த வருஷம் நான்
ஊரில் இல்லை


தகவல் தொழில்நுட்ப துறையில்
தலைய விட்டேன்
என் கிராமத்து வாழ்க்கைய
தவற விட்டேன்
 

15 comments:

  1. எலும்புக்கும் சதைக்கும்
    அலைகின்ற இலங்கை போல
    போர் ஒன்னு நடக்குது பந்தியில

    //////////


    கவிதை மிக அருமை

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நன்றி உலவு.காம்

    ReplyDelete
  3. கவிதை நல்லா வந்து இருக்கு தர்மா.

    ReplyDelete
  4. தகவல் தொழில்நுட்ப துறையில்
    தலைய விட்டேன்
    என் கிராமத்து வாழ்க்கைய
    தவற விட்டேன்



    ....... பாவங்க, நீங்க..... எவ்வளவு மிஸ் பண்ணுகிறீர்கள் என்பதற்கு கவிதையே சாட்சி.

    உங்கள் ப்லாக் ஓபன் பண்ணும் போது, ஏதோ ஏதோ விளம்பரங்கள் பாப் அப் ஆகுது. சில சமயம், malware/adware வந்து விடுமோ என்று உங்கள் பேஜ் ஓபன் பண்ண யோசனையாய் இருக்கிறது. நேரம் இருக்கும் போது, கொஞ்சம் கவனிங்கள், ப்ளீஸ்.

    ReplyDelete
  5. //உங்கள் ப்லாக் ஓபன் பண்ணும் போது, ஏதோ ஏதோ விளம்பரங்கள் பாப் அப் ஆகுது.//

    அப்படியா?
    கண்டிப்பா நான் அதை பார்கிறேன்...

    நன்றி Chitra அவர்களே

    ReplyDelete
  6. நன்றி நாய்க்குட்டி மனசு அவர்களே

    ReplyDelete
  7. கவிதை ரொம்ப யதார்த்தமா இருக்கு..

    ஆனாலும்...
    "என் பையன் சென்னைல பெரிய சாப்ட்வேர் இஞ்சினியரா இருக்கான்"னு அப்பா பெருமையா சொல்றத கேக்கும் போதும்.. "நீ வேலைக்கு போனதுக்கு அப்புறம் தான் கவலை இல்லாம நிம்மதியா இருக்கு"-னு அம்மா சொல்லும் போதும் நாம் இழந்தது ஒன்னும் பெருசா தோணுறது இல்ல..

    ReplyDelete
  8. //"என் பையன் சென்னைல பெரிய சாப்ட்வேர் இஞ்சினியரா இருக்கான்"னு அப்பா பெருமையா சொல்றத கேக்கும் போதும்.. "நீ வேலைக்கு போனதுக்கு அப்புறம் தான் கவலை இல்லாம நிம்மதியா இருக்கு"-னு அம்மா சொல்லும் போதும் நாம் இழந்தது ஒன்னும் பெருசா தோணுறது இல்ல.. //


    அணு இது உங்க அனுபவம் போல?


    நன்றி அணு அவர்களே..

    ReplyDelete
  9. நன்றி சுதாகர்

    ReplyDelete
  10. //அணு இது உங்க அனுபவம் போல?//

    கிட்ட தட்ட என் அனுபவமும் தான்... :)

    ReplyDelete
  11. இவ்ளோ அழகா பெருசா கவிதை எழுதுவீங்லா.... நல்லா இருக்கு.... சும்மா கலக்குங்க...

    ReplyDelete
  12. இப்போ தான் ஒழுங்க படிச்சேன்... மிகவும் நன்றாக இருக்கு... நான் கூட திருவிழாகு எல்லாம் போனதே கிடையாது ...பா

    ReplyDelete
  13. excellent words are used in "Thirupa Kidaikuma"....People are wrking in IT companies who all are coming frm village oly...Wonderful Kavithai

    ReplyDelete

Write you comments here :)

இதையும் பார்க்கலாமே...

Related Posts with Thumbnails