May 21, 2010

கசந்து போன காலம்






நீயும் நானும் 
நாம் ஆகி போன காலம்


வருங்காலம் பற்றி
வாய்வலிக்க பேசிய நேரம்


ஊடலும் கூடலும்
குழவிய தழுவலும்


கண்ணீரால் அழிந்த எழுத்தை
தாங்கி வந்த கடிதத்தையும்


வர வேண்டாம் என சொல்லி
தந்த அழைப்பிதழையும்



என் குழந்தை என சொன்னபோதும்
நம் குழந்தை என காதில் கேட்ட கணம் 


கணவன் - மனைவி ஆனோம்
நீ உன் கணவனுக்கும்
நான் என் மனைவிக்கும்  


கட(ச)ந்த காலத்தை
மறந்தாலும்..
மறக்க நினைத்தாலும்.. 


கண்ணின் ஓரம் சிறிதாய் ஈரம்..


9 comments:

  1. பிரிவு எப்போதும் துயரமானது தான்

    நல்லாயிருக்குங்க கவிதை

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. //பிரிவு எப்போதும் துயரமானது தான்// - உண்மை
    நன்றி VELU.G அவர்களே

    ReplyDelete
  4. வர வேண்டாம் என சொல்லி
    தந்த அழைப்பிதழையும்


    ....... பாவம் ....... கவிதையில் ஒரு மெல்லிய சோகம். அதுவும் அழகு.

    ReplyDelete
  5. நன்றி Chitra அவர்களே

    ReplyDelete
  6. Dr.P.Kandaswamy ஐயா வந்துடீங்களா..
    உங்களைதான் நான் எதிர் பார்த்தேன்....
    வந்தமைக்கு நன்றி...

    ReplyDelete
  7. கவிதை சூப்பர்.,
    கவிதை படிச்சி முடிச்சதும்
    ஒரு மெல்லிய சோகம்
    படர்வதை உணர முடியுது..

    அது தான் உங்க Success..

    ReplyDelete
  8. நன்றி வெங்கட் அவர்களே

    ReplyDelete

Write you comments here :)

இதையும் பார்க்கலாமே...

Related Posts with Thumbnails