October 11, 2011

வைராக்கிய வியாபாரி




நான்கு ரூபாய் தேநீருக்கு
நூற்றி இரண்டு ரூபாய் என் கையில்
சில்லறை சண்டை முற்றவே

நூறை ஒற்றை விரலில் முன் தள்ளி
நாளை பெறுகிறேன் மீதம்
என்றேன்

நாணயத்தை மட்டும் ஓர் விரலால் இழுத்து
நாளை பெறுகிறேன் மீதம்
என்றான் 

1 comment:

Write you comments here :)

இதையும் பார்க்கலாமே...

Related Posts with Thumbnails