April 27, 2013

மெல்லிய வல்லினம்கால்கள் இரண்டினை 
பிடித்து தூக்குவதன் மூலம் 
எளிதாய் 
துரு பிடித்த 
சதுர கம்பிகள் கொண்ட 
கூண்டில் இருந்து 
கோழிக்கு 
விடுதலை 
கொடுக்கலாம் 

சிறகுகளை அடித்து
தன் இணைக்கோ 
அல்லது 
குஞ்சிற்க்கோ 
தன் பிரிவை 
உணர்த்துவதை 
பொருட்படுத்தாமல் 
அதன் எடையை 
துல்லியமாய் கணிக்கலாம் 

உடலில் இருந்து 
வர மறுக்கும் 
பறக்க உதவாத 
அதன் பக்கவாட்டு 
இறக்கைகளை 
வலுவாக இரு கைகளால் 
பிய்த்து 
எறிந்துவிடலாம் 
அவை அங்கு மேயும் 
நாய் குட்டிகள் 
விளையாடும் 
பொருளாய் மாறும்   

சுகத்தில் அவை 
அலறும் சத்தத்தை 
நிறுத்த 
சிறிது நேரம் 
கொதிக்கும் நீரில் 
மூழ்கி எடுக்கலாம் 
உங்கள் நகம் கூட நீரில் 
படாமல் கவனமாய் 
இருக்கட்டும் 

இனி 
சிரமமின்றி 
ரோமங்கள் அற்ற 
சடலத்தினை 
வெட்டுவதற்க்கு
துவாய் மர  
பலகையின் மீது
கிடத்துவதற்க்கு
முன்பு ஒரு முறை 
உங்கள் கடவுளை 
பிராத்தித்துக் 
கொள்ளுங்கள் 
 
நம்மை நம்பி 
நாம் தூக்கியெறிந்த 
தானியத்தை தின்று 
வெளியேற்றிய 
வையிற்று கறியை 
வைத்துக்கொண்டு 
அது  வெளியேற்றாமல் 
வைத்திருந்த அன்பு 
இருக்கும் 
மூளை பகுதியை 
வெளியே தூக்கி 
எறியவும் 

இதோ அதன் 
வாழ்கை முக்தி 
பெரும் நேரம் 
நன்றாய் சமைத்து 
நாவினில் படும்போது 
அவை உயிருடன் 
வாழ்ந்தவை 
என்பதை 
எளிதாய் 
மறந்துவிடலாம் 
 
பிறந்தவுடன் தாய் 
இறந்த துக்கத்தை 
குஞ்சுகளுக்கு  தராமல்
இருக்க  
அவைகள் பிறக்கும் 
முன்னே கருப்பானதொரு  
கல்லில் போட்டு 
கருவழிக்கலாம் 


புரட்சிகள் புரியவும் 
கருணை காட்டவும் 
கற்புகள் காக்கவும் 
ஆறுதல் கூறவும் 
அரசியல் நாறவும் 
இன்று 
உடலில் போதிய 
போஷாக்கினை 
சேர்த்தாயிற்று 

நிம்மதியாய் 
இருங்கள் !!

April 17, 2013

நேற்றுஇன்றோ நாளையோ
திரும்பாத ஒன்று
நேற்று

புன்னகையுடன்
அசைபோடுபவனுக்கு
அழகானது
நேற்று

கண்ணீருடன்
அசைபோடுபவனுக்கு
மனதில் உரமானது
நேற்று

கடந்து போகும்
ஒவ்வொரு நொடியும்
இன்றல்
நேற்று தான்

இன்றே விழித்து
செயல்படுபவன் அறிவான்
நாளையின் நேற்றை
சிறை பிடிக்கும்
சூட்சமம் 

April 14, 2013

சிரிப்பு


ஆக்ரோஷமான 
பேசுக்கு இடையிலும்
சித்திரவதைகள் 
புரியும் போதும் 
முக்கியமாக 
கடத்திய பிறகான 
தொலைபேசி 
உரையாடல் 
முடியும் முன்பும்  
வாய்விட்டு 
பெரியதோர் 
சிரிப்பு 
சிரிபதில்லை 
எந்த ஒரு நிஜ 
வில்லனும் 

March 31, 2013

வாசல் வாழ்கை..
குட்டி ஒன்று 
வந்தவுடன் 
முகத்துடன் முகம் தேய்த்து 
கொஞ்சல்கள் 

படுக்கை அறை முதல் 
உணவு மேஜை வரை 
ராஜபோக வாழ்கை 
வளரும் வரை 

தெருவாசல் வரை 
வழி அனுப்பும் 
விசுவாச 
வால் ஆட்டல்கள் 

முட்டையுடன் கறிச்சோறு
தெருமுனை வரை 
நடை பயிற்சி என 
கழிகிறது சில காலங்கள்  

மூன்றடி சங்கிலியில் 
முடிகிறது வாழ்கை 
ஆறடி விட்டத்தில் 
அடங்குகிறது ஒரு ஆட்டம் 

சோகமும் சிறிது கண்ணீரும் 
ஆட்கொள்கிறது அவ்வீட்டை 
அடுத்த குட்டி ஒன்று 
வரும் வரை 

கழுத்துப் பட்டையும் 
பெரிய அலுமினிய தட்டும் 
காத்திருக்கின்றன 
குட்டி வளரும் வரை 

March 09, 2013

வடக்கு வளர்கிறது.. தெற்கு தேய்கிறது...வடக்கு வளர்கிறது.. தெற்கு தேய்கிறது...
இது இந்தியாவுக்காகவே எழுதப்பட்ட பழமொழி என்று தோன்றுகிறது. 

நான் இந்திய சகோதர சகோதிரிகளை வட இந்தியர்கள் - தென் இந்தியர்கள் என பிரித்து பேசுவதற்கு முதலில் வருந்துகிறேன். ஆனால் எதார்த்தத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்.

வடக்கில் நடக்கும் எந்த ஒரு பிரச்சனையையும் நாம் உடனே அறியும் வகையில் நமது ஊடகங்கள் உள்ளன. அதுபோல் தெற்கில் நடக்கும் சில முக்கிய பிரச்சனைகளை வடக்கு அறியுமா? அவர்கள் ஊடகம் அவ்வாறு செயல் படுகிறதா? தினமும் நம் தலைப்புச்  செய்திகளில் ஒரு வட இந்திய  செய்தியாவது தவறாமல் இடம் பெறுகிறது. அங்கே அப்படி நடக்கிறதா? 

சந்தேகம் தான். 

நமக்கு வட இந்தியாவை பற்றி அறிந்துகொள்ள அவசியம் இருக்கிறது (தலைநகரம் அங்கே). ஆனால் அவர்களுக்கு, பாழாப் போன தென் இந்தியாவை பற்றி அறிந்துக் கொள்ள என்ன அவசியம் இருக்கிறது? பிரச்சனைகள் இங்கே சமம். ஏராளம். அதில் மாற்றுக் கருத்து இல்லை. என் கேள்வி பிரச்சனைகளை அனைவரும் அறிந்திருக்கிறோமா என்பதே. 

வடக்கே ஒரு பிரச்சனை என்றால் கொதித்தெழுந்தும், முகநூலில் ஆவேசம் அடைந்தும்,  மெழுகுவத்தி ஏந்தியும் நாம் போராடுவோம்(!!??). தென் இந்தியாவின் ஒரு பிரச்சனைக்கு அவர்கள் ஓங்கி குரல் கொடுத்தார்கள் என்று சொல்லுங்கள் பார்ப்போம். 

காரணம்???

மொழி. இந்தி.. ஒட்டு மொத்த இந்தியாவே இந்தியால் இணைந்திருக்கிறது. தமிழ்நாடு துண்டிக்கப்பட்டிருக்கிறது. அவ்வளவு ஏன். தென் இந்தியாவை எடுத்துக்கொள்ளுங்கள். ஆந்திரம், கர்நாடகம், கேரளம், தமிழகம் இந்த நான்கு மாநிலத்தவர்கள் ஒன்று கூடினால் எல்லோரும் இந்தியில்  பேசிக்கொள்வார்கள். தமிழன் தவிப்பான் (அனுபவம்!!!). 
இந்தியாவில் நூற்றில் நாற்பதிற்கும் குறைவானவர்களுக்கே ஈழ பிரச்சனை பற்றித் தெரியும் என்பது ஒரு வருத்தமான புள்ளிவிவரம். முழுக்க முழுக்க நாம் தான் காரணம். ஒரு முகநூல் பதிவில் கூட தமிழில் தான் குமுறுகிறோம். தமிழனோடு முடிகிறது அது. நம் நாட்டை தாண்டி அந்த பிரச்சனை செல்வதில்லை.

என்ன செய்ய வேண்டும் என நீங்களே முடிவு செய்யுங்கள்...
  
இவ்வளவு சொல்லிவிட்டு நான் ஏன் தமிழில் எழுதுகிறேன் என்று தோனலாம்.  இந்தச் செய்தி தமிழர்களுக்குத் தான்.

March 08, 2013

வறுமை Vs வெறுமைவறுமை ஒருவனை திடமாக்கும்..
வெறுமை ஒருவனை முடமாக்கும்.. 
#அனுபவம்தைரியம்ஓடுகிற நாயை கல்லால் அடிக்கும் தைரியம், 
ஓடாமல் நிற்கும் நாயின் மீது வருவதில்லை...

தோல்வியை நோக்கி..
வெற்றியை நோக்கிய ஓட்டம் தோல்வியில் முடிந்ததால், 
தோல்வியை நோக்கிய ஓட்டத்தில் தோல்வியடைய ஓடிக்கொண்டிருக்கிறேன்...

GRAY & RED
i always support GRAY line to win RED line in the YouTube race..

அவ்வ்வ் சங்கம்....அய்யய்யய்யய்யோ... Facebook Pages இலவசமா குடுத்தாலும் குடுத்தான் "துபாயா சங்கம்... அவ்வ்வ் சங்கம்... பட்டன் சங்கம்... சங்கீதா சங்கம்... விஜய் அஜித் சூர்யா விக்ரம் மொக்க படங்களை அறவே வெறுக்கும் சங்கம்.. " னு இவிங்க பண்ற அக்கபோரு தாங்க முடியல... 

ஒரு பக்கத்த கிரியேட் பண்ணிட்டு ADMIN.. ADMIN.. னு பண்ற ரவுசு...... 

# நாராயணா இந்த கொசு தொல்ல தாங்க முடியல... 
என்னது அப்படி கூட ஒரு பக்கம் இருக்கா??? 

சொபாபாபாபா..... முடியலடா சாமி...

February 21, 2013

பொன்னியின் செல்வன் Highlights: Part1
பொன்னியின் செல்வன் Highlights:
###############################

"அக்கா! என்ன கேட்டீர்கள்?" என்றாள் வானதி.

"என்ன கேட்டேனா? உன் கவனம் எங்கே சென்றிருந்தது?"

"எங்கும் போகவில்லையே? உங்களிடம் தான் இருந்தது?"

"அடி கள்ளி! ஏனடி பொய் சொல்லுகிறாய்! உண்மையில் உன் மனம் இவ்விடத்தில் இல்லவே இல்லை! எங்கே இருக்கிறது என்று நன் சொல்லட்டுமா?"

"தெரிந்தால் சொல்லுங்களேன்!"

"நன்றாகத் தெரியும். ஈழ நாட்டுப் போர்களத்திற்குப் போயிருக்கிறது. அங்கே ஏன் தம்பி, ஒரு கபடமற்ற பிள்ளை இருக்கிறானே, அவனை இன்னும் என்ன பொடி போட்டு மயக்கலாம் என்று உன் மனம் யோசித்துக் கொண்டிருக்கிறது!"

"நீங்கள் கூறியதில் ஒரு பாதி உண்மை தான் அக்கா! என் மனம் ஈழ நாட்டுக்குத்தான் அடிக்கடி பொய் விடுகிறது. ஆனால் அவரை பொடி போட்டு மயக்குவதைப் பற்றி யோசிக்கவில்லை. அவர் போர்க்களத்தில் எப்படியெல்லாம்  கஷ்டப்படுகிறாரோ, என்ன உணவு சாப்பிடுகிறாரோ - என்றெல்லாம் எண்ணமிடுகிறது. அவர் அப்படியெல்லாம் அங்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்க, இங்கே நான் சுகமாக உண்டு உடுத்து பஞ்சணை மெத்தையில் படுத்துத் தூங்குவதை நினைக்கும் போது வேதனையாய்இருக்கிறது.  எனக்கு மட்டும் இறகுகள் இருந்தால், இந்த நிமிஷமே இலங்கைக்குப் பறந்து போய் விடுவேன்..!"

"பறந்து போய் என்ன செய்வாய்? அவனுக்கு மேலும் உபத்திரவந்தானே செய்வாய்?"

"ஒரு நாளும் இல்லை. அர்ச்சுனனுக்குச் சுபத்திரையும் கிருஷ்ணனுக்குச் சத்யபாமாவும் ரதம் ஓட்டியது போல் நானும் ஓட்டுவேன். அவர் பேரில் ய்யும் அம்புகளை ஏன் மார்பில் நான் தாங்கிக் கொள்வேன்..."

"நீ  தாங்கிக் கொண்டால் அதை அவன் பார்த்துக் கொண்டிருப்பானா?"

"அது அவருக்கு இஷ்டமில்லாவிட்டால் பாசறையில் காத்திருப்பேன். போர்க்களத்திலிருந்து அவர் திரும்பி வந்ததும் காயங்களுக்கு மருந்து போட்டுக் கட்டுவேன். மலர் படுக்கை விரித்து வைத்திருப்பேன். அறுசுவை உண்டி சமைத்து வைத்திருந்து அளிப்பேன். உடல் வலியை மறப்பதற்கு வீணை மீட்டிப் பாட்டுப் பாடித் தூங்கப் பண்ணுவேன்.. "    

"இதெல்லாம் நடவாத காரியங்கள், வானதி! சோழ குலத்து வீரர்கள் போர்க்களங்களுக்குப் பெண்களை அழைத்துப் போவதில்லை..."

"ஏன் அக்கா, அப்படி?"

"அவர்களுக்குப் புண்களைப் பற்றி பயமில்லை; அதைக் காட்டிலும் பெண்களைப் பற்றிதான் அதிக பயம்!"

"அது ஏன்? பெண்கள் அவர்களை என்ன செய்து விடுவார்கள்?"

"அவர்களை ஒன்றும் செய்ய மாட்டார்கள்; ஆனால் உன்னை போன்ற பெண்கள் போர்க்களத்துக்குப் போனால் எதிரிப்படை வீரர்கள் உங்களுடைய அழகைக் கண்டு மயங்கி வந்து சரணாகதி அடைந்து விட்டால் என்ன செய்கிறது? அப்போது நம் சோழ நாட்டு வீரர்கள் தங்களுடைய வீரத்தை காட்ட முடியாதல்லவா? பெண்களைக் கொண்டு வெற்றியடைந்தார்கள் என்ற புகழைச் சோழ குலத்தோர் விரும்புவதில்லை."

#####################
Highlights தொடரும்..      

February 17, 2013

ஒருநாள்சாலையில் தொலைத்த 
நூறு ரூபாய் திரும்ப கிடைக்க 

நேற்று துரத்திய நாய் 
இன்று என்னிடம் வாலாட்ட 
குருதியற்ற செய்திதாள் படிக்க 
குப்பை மேடு கோயிலாய் மாற 

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 
இருந்து கடிதம் வர 

ஈழத் தமிழன் ஈழம் ஆள 
சாதியத்தலைவன் கருப்பு சட்டை அணிய

புன்னகையுடன் துயில் கலைந்து  
கண் திறவாமல் இந்த கனவுகளை 
பொக்கிஷமாய் பதுக்கி வைத்தேன் 
என் தலையணை அடியில்

February 02, 2013

துகள்
கட்டற்ற பலம் இருந்தும் 
கட்டுட்றேன் ஒரு கூந்தல் இழையில் 
கட்டியவள் என் கண் முன் இல்லை 
கட்டவிழக்க எனக்கு மனம் இல்லை 

திண்ணிய எண்ணம் 
அதை மாற்றியது  ஒரு வண்ணம் 
வண்ணங்கள் இன்று வெளுத்துப் போக 
எண்ணங்கள் எரிகிறது தழலில்  

அலை இடி மழை புயல் வெள்ளம் 
இவை நிறுத்தும் இதய துடிப்பை 
திசைமானி இல்லா மாலுமி நான் 
விசையோடு போட்டேன் துடுப்பை 

வில்லினை வளைத்து அம்பினை சீவி 
பெரும் படையின் முன் நான் 
தோல்வி என தெரிந்தும் போராட தயாரானேன் 
சிறு புல்லை ஆயுதமாய் ஏந்தி 

தொலைந்ததை தேடும் உலகம் ஒரு  
அகழ்வாராய்ச்சி 
இது எனக்கான ஒரு சிறு துகளை  தேடும் 
புகழாராய்ச்சி 

-தர்மா 


இதையும் பார்க்கலாமே...

Related Posts with Thumbnails