February 21, 2013

பொன்னியின் செல்வன் Highlights: Part1
பொன்னியின் செல்வன் Highlights:
###############################

"அக்கா! என்ன கேட்டீர்கள்?" என்றாள் வானதி.

"என்ன கேட்டேனா? உன் கவனம் எங்கே சென்றிருந்தது?"

"எங்கும் போகவில்லையே? உங்களிடம் தான் இருந்தது?"

"அடி கள்ளி! ஏனடி பொய் சொல்லுகிறாய்! உண்மையில் உன் மனம் இவ்விடத்தில் இல்லவே இல்லை! எங்கே இருக்கிறது என்று நன் சொல்லட்டுமா?"

"தெரிந்தால் சொல்லுங்களேன்!"

"நன்றாகத் தெரியும். ஈழ நாட்டுப் போர்களத்திற்குப் போயிருக்கிறது. அங்கே ஏன் தம்பி, ஒரு கபடமற்ற பிள்ளை இருக்கிறானே, அவனை இன்னும் என்ன பொடி போட்டு மயக்கலாம் என்று உன் மனம் யோசித்துக் கொண்டிருக்கிறது!"

"நீங்கள் கூறியதில் ஒரு பாதி உண்மை தான் அக்கா! என் மனம் ஈழ நாட்டுக்குத்தான் அடிக்கடி பொய் விடுகிறது. ஆனால் அவரை பொடி போட்டு மயக்குவதைப் பற்றி யோசிக்கவில்லை. அவர் போர்க்களத்தில் எப்படியெல்லாம்  கஷ்டப்படுகிறாரோ, என்ன உணவு சாப்பிடுகிறாரோ - என்றெல்லாம் எண்ணமிடுகிறது. அவர் அப்படியெல்லாம் அங்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்க, இங்கே நான் சுகமாக உண்டு உடுத்து பஞ்சணை மெத்தையில் படுத்துத் தூங்குவதை நினைக்கும் போது வேதனையாய்இருக்கிறது.  எனக்கு மட்டும் இறகுகள் இருந்தால், இந்த நிமிஷமே இலங்கைக்குப் பறந்து போய் விடுவேன்..!"

"பறந்து போய் என்ன செய்வாய்? அவனுக்கு மேலும் உபத்திரவந்தானே செய்வாய்?"

"ஒரு நாளும் இல்லை. அர்ச்சுனனுக்குச் சுபத்திரையும் கிருஷ்ணனுக்குச் சத்யபாமாவும் ரதம் ஓட்டியது போல் நானும் ஓட்டுவேன். அவர் பேரில் ய்யும் அம்புகளை ஏன் மார்பில் நான் தாங்கிக் கொள்வேன்..."

"நீ  தாங்கிக் கொண்டால் அதை அவன் பார்த்துக் கொண்டிருப்பானா?"

"அது அவருக்கு இஷ்டமில்லாவிட்டால் பாசறையில் காத்திருப்பேன். போர்க்களத்திலிருந்து அவர் திரும்பி வந்ததும் காயங்களுக்கு மருந்து போட்டுக் கட்டுவேன். மலர் படுக்கை விரித்து வைத்திருப்பேன். அறுசுவை உண்டி சமைத்து வைத்திருந்து அளிப்பேன். உடல் வலியை மறப்பதற்கு வீணை மீட்டிப் பாட்டுப் பாடித் தூங்கப் பண்ணுவேன்.. "    

"இதெல்லாம் நடவாத காரியங்கள், வானதி! சோழ குலத்து வீரர்கள் போர்க்களங்களுக்குப் பெண்களை அழைத்துப் போவதில்லை..."

"ஏன் அக்கா, அப்படி?"

"அவர்களுக்குப் புண்களைப் பற்றி பயமில்லை; அதைக் காட்டிலும் பெண்களைப் பற்றிதான் அதிக பயம்!"

"அது ஏன்? பெண்கள் அவர்களை என்ன செய்து விடுவார்கள்?"

"அவர்களை ஒன்றும் செய்ய மாட்டார்கள்; ஆனால் உன்னை போன்ற பெண்கள் போர்க்களத்துக்குப் போனால் எதிரிப்படை வீரர்கள் உங்களுடைய அழகைக் கண்டு மயங்கி வந்து சரணாகதி அடைந்து விட்டால் என்ன செய்கிறது? அப்போது நம் சோழ நாட்டு வீரர்கள் தங்களுடைய வீரத்தை காட்ட முடியாதல்லவா? பெண்களைக் கொண்டு வெற்றியடைந்தார்கள் என்ற புகழைச் சோழ குலத்தோர் விரும்புவதில்லை."

#####################
Highlights தொடரும்..      

February 17, 2013

ஒருநாள்சாலையில் தொலைத்த 
நூறு ரூபாய் திரும்ப கிடைக்க 

நேற்று துரத்திய நாய் 
இன்று என்னிடம் வாலாட்ட 
குருதியற்ற செய்திதாள் படிக்க 
குப்பை மேடு கோயிலாய் மாற 

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 
இருந்து கடிதம் வர 

ஈழத் தமிழன் ஈழம் ஆள 
சாதியத்தலைவன் கருப்பு சட்டை அணிய

புன்னகையுடன் துயில் கலைந்து  
கண் திறவாமல் இந்த கனவுகளை 
பொக்கிஷமாய் பதுக்கி வைத்தேன் 
என் தலையணை அடியில்

February 02, 2013

துகள்
கட்டற்ற பலம் இருந்தும் 
கட்டுட்றேன் ஒரு கூந்தல் இழையில் 
கட்டியவள் என் கண் முன் இல்லை 
கட்டவிழக்க எனக்கு மனம் இல்லை 

திண்ணிய எண்ணம் 
அதை மாற்றியது  ஒரு வண்ணம் 
வண்ணங்கள் இன்று வெளுத்துப் போக 
எண்ணங்கள் எரிகிறது தழலில்  

அலை இடி மழை புயல் வெள்ளம் 
இவை நிறுத்தும் இதய துடிப்பை 
திசைமானி இல்லா மாலுமி நான் 
விசையோடு போட்டேன் துடுப்பை 

வில்லினை வளைத்து அம்பினை சீவி 
பெரும் படையின் முன் நான் 
தோல்வி என தெரிந்தும் போராட தயாரானேன் 
சிறு புல்லை ஆயுதமாய் ஏந்தி 

தொலைந்ததை தேடும் உலகம் ஒரு  
அகழ்வாராய்ச்சி 
இது எனக்கான ஒரு சிறு துகளை  தேடும் 
புகழாராய்ச்சி 

-தர்மா 


இதையும் பார்க்கலாமே...

Related Posts with Thumbnails