March 31, 2013

வாசல் வாழ்கை..
குட்டி ஒன்று 
வந்தவுடன் 
முகத்துடன் முகம் தேய்த்து 
கொஞ்சல்கள் 

படுக்கை அறை முதல் 
உணவு மேஜை வரை 
ராஜபோக வாழ்கை 
வளரும் வரை 

தெருவாசல் வரை 
வழி அனுப்பும் 
விசுவாச 
வால் ஆட்டல்கள் 

முட்டையுடன் கறிச்சோறு
தெருமுனை வரை 
நடை பயிற்சி என 
கழிகிறது சில காலங்கள்  

மூன்றடி சங்கிலியில் 
முடிகிறது வாழ்கை 
ஆறடி விட்டத்தில் 
அடங்குகிறது ஒரு ஆட்டம் 

சோகமும் சிறிது கண்ணீரும் 
ஆட்கொள்கிறது அவ்வீட்டை 
அடுத்த குட்டி ஒன்று 
வரும் வரை 

கழுத்துப் பட்டையும் 
பெரிய அலுமினிய தட்டும் 
காத்திருக்கின்றன 
குட்டி வளரும் வரை 

March 09, 2013

வடக்கு வளர்கிறது.. தெற்கு தேய்கிறது...வடக்கு வளர்கிறது.. தெற்கு தேய்கிறது...
இது இந்தியாவுக்காகவே எழுதப்பட்ட பழமொழி என்று தோன்றுகிறது. 

நான் இந்திய சகோதர சகோதிரிகளை வட இந்தியர்கள் - தென் இந்தியர்கள் என பிரித்து பேசுவதற்கு முதலில் வருந்துகிறேன். ஆனால் எதார்த்தத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்.

வடக்கில் நடக்கும் எந்த ஒரு பிரச்சனையையும் நாம் உடனே அறியும் வகையில் நமது ஊடகங்கள் உள்ளன. அதுபோல் தெற்கில் நடக்கும் சில முக்கிய பிரச்சனைகளை வடக்கு அறியுமா? அவர்கள் ஊடகம் அவ்வாறு செயல் படுகிறதா? தினமும் நம் தலைப்புச்  செய்திகளில் ஒரு வட இந்திய  செய்தியாவது தவறாமல் இடம் பெறுகிறது. அங்கே அப்படி நடக்கிறதா? 

சந்தேகம் தான். 

நமக்கு வட இந்தியாவை பற்றி அறிந்துகொள்ள அவசியம் இருக்கிறது (தலைநகரம் அங்கே). ஆனால் அவர்களுக்கு, பாழாப் போன தென் இந்தியாவை பற்றி அறிந்துக் கொள்ள என்ன அவசியம் இருக்கிறது? பிரச்சனைகள் இங்கே சமம். ஏராளம். அதில் மாற்றுக் கருத்து இல்லை. என் கேள்வி பிரச்சனைகளை அனைவரும் அறிந்திருக்கிறோமா என்பதே. 

வடக்கே ஒரு பிரச்சனை என்றால் கொதித்தெழுந்தும், முகநூலில் ஆவேசம் அடைந்தும்,  மெழுகுவத்தி ஏந்தியும் நாம் போராடுவோம்(!!??). தென் இந்தியாவின் ஒரு பிரச்சனைக்கு அவர்கள் ஓங்கி குரல் கொடுத்தார்கள் என்று சொல்லுங்கள் பார்ப்போம். 

காரணம்???

மொழி. இந்தி.. ஒட்டு மொத்த இந்தியாவே இந்தியால் இணைந்திருக்கிறது. தமிழ்நாடு துண்டிக்கப்பட்டிருக்கிறது. அவ்வளவு ஏன். தென் இந்தியாவை எடுத்துக்கொள்ளுங்கள். ஆந்திரம், கர்நாடகம், கேரளம், தமிழகம் இந்த நான்கு மாநிலத்தவர்கள் ஒன்று கூடினால் எல்லோரும் இந்தியில்  பேசிக்கொள்வார்கள். தமிழன் தவிப்பான் (அனுபவம்!!!). 
இந்தியாவில் நூற்றில் நாற்பதிற்கும் குறைவானவர்களுக்கே ஈழ பிரச்சனை பற்றித் தெரியும் என்பது ஒரு வருத்தமான புள்ளிவிவரம். முழுக்க முழுக்க நாம் தான் காரணம். ஒரு முகநூல் பதிவில் கூட தமிழில் தான் குமுறுகிறோம். தமிழனோடு முடிகிறது அது. நம் நாட்டை தாண்டி அந்த பிரச்சனை செல்வதில்லை.

என்ன செய்ய வேண்டும் என நீங்களே முடிவு செய்யுங்கள்...
  
இவ்வளவு சொல்லிவிட்டு நான் ஏன் தமிழில் எழுதுகிறேன் என்று தோனலாம்.  இந்தச் செய்தி தமிழர்களுக்குத் தான்.

March 08, 2013

வறுமை Vs வெறுமைவறுமை ஒருவனை திடமாக்கும்..
வெறுமை ஒருவனை முடமாக்கும்.. 
#அனுபவம்தைரியம்ஓடுகிற நாயை கல்லால் அடிக்கும் தைரியம், 
ஓடாமல் நிற்கும் நாயின் மீது வருவதில்லை...

தோல்வியை நோக்கி..
வெற்றியை நோக்கிய ஓட்டம் தோல்வியில் முடிந்ததால், 
தோல்வியை நோக்கிய ஓட்டத்தில் தோல்வியடைய ஓடிக்கொண்டிருக்கிறேன்...

GRAY & RED
i always support GRAY line to win RED line in the YouTube race..

அவ்வ்வ் சங்கம்....அய்யய்யய்யய்யோ... Facebook Pages இலவசமா குடுத்தாலும் குடுத்தான் "துபாயா சங்கம்... அவ்வ்வ் சங்கம்... பட்டன் சங்கம்... சங்கீதா சங்கம்... விஜய் அஜித் சூர்யா விக்ரம் மொக்க படங்களை அறவே வெறுக்கும் சங்கம்.. " னு இவிங்க பண்ற அக்கபோரு தாங்க முடியல... 

ஒரு பக்கத்த கிரியேட் பண்ணிட்டு ADMIN.. ADMIN.. னு பண்ற ரவுசு...... 

# நாராயணா இந்த கொசு தொல்ல தாங்க முடியல... 
என்னது அப்படி கூட ஒரு பக்கம் இருக்கா??? 

சொபாபாபாபா..... முடியலடா சாமி...

இதையும் பார்க்கலாமே...

Related Posts with Thumbnails